கடற்கரை கைப்பந்து (Beach Volleyball) மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இது ஒரு அற்புதமான இடம். நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பீச் வாலிபால் அகாடமி (TNBVA) மாநில, தேசிய மற்றும் ஒலிம்பிக் தரத்தில் விளையாட விரும்பும் வீரர்களை உருவாக்கும் நோக்கில் மிகச் சிறந்த தொழில்முறை பயிற்சியை வழங்குகிறது.
இங்கு பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் வீரர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குகிறார்கள். தரமான விளையாட்டு உடைகள், சத்தான உணவு, போட்டிகளுக்கான பயணச் செலவு, மேலும் கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு வசதிகளையும் செய்து தருகிறார்கள்.
நான் அபிதன். தற்போது SRM பல்கலைக்கழகத்தில் PG படிப்பை Sports Quota-வில் Free Seat மூலம் பயின்று வருகிறேன். இந்த வாய்ப்பு கிடைப்பதற்கும், நான் இன்று இந்த நிலையை அடைவதற்கும் தமிழ்நாடு பீச் வாலிபால் அகாடமி மற்றும் அதன் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் முக்கிய காரணம்.
கடற்கரை கைப்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட ஒவ்வொரு இளம் வீரர், வீராங்கனையும் கண்டிப்பாக இந்த அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும் என்று மனப்பூர்வமாக பரிந்துரைக்கிறேன்.